இன்றைய முக்கிய கல்வி செய்திகள் 25.09.2019(புதன்கிழமை) Today's educational messages

இன்றைய முக்கிய கல்வி செய்திகள் 25.09.2019(புதன்கிழமை) Today's educational messages



03.10.2019 முதல் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகளில் புறமதிப்பீடு குழுவாக ஆய்வு செய்ய உத்தரவு - SPD Proceedings வெளியீடு 

⛑⛑அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் அதிகரிப்பு: நிதி ஒதுக்கி அரசு உத்தரவு

⛑⛑ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

⛑⛑தொடக்கக் கல்வித் துறையில் 2008 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்து தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணை வெளியீடு

⛑⛑NMMS Examination Dec 2019 Notification Published - தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2019 அறிவிப்பு.
தேர்வு தேதி:01/12/2019.

⛑⛑உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் ஆணையம் அதிரடி 

⛑⛑தமிழகம் முழுவது நேற்று முதல் 412 மையங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.

⛑⛑பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது
திரைத்துறையிலேயே மிக உயரிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்

⛑⛑முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார்.

⛑⛑2024ம் ஆண்டுக்குள் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதி தருவதற்கு முடிவு  செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

⛑⛑பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமடைந்துள்ளன.

⛑⛑கேரள அரசுடன் நதிநீர் பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று திருவனந்தபுரம் செல்கிறார்.

⛑⛑தொழில்நுட்பம் ஆபத்தான பாதையை நோக்கி திரும்பி இருப்பதால், சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


🌹👉தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையின் ஏராளமான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் 4000க்கும் அதிகமான முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கடந்த சூன் 11 முதல் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாகஅறிவிக்கப்பட்டது.

பின்னர் வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் காலாண்டு விடுமுறையில் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது:-

🌹👉கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிந்துள்ளது.

👉மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉கடந்த 2014-15 ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 37 லட்சத்து 70 ஆயிரத்து 949 ஆக குறைந்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில், இதே கால கட்டங்களில், 98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர்கள் சேர்க்கை, 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது.

👉பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 71.1 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை 28.9 சதவீதமாகவும் உள்ளது.ஆனால் முதுகலை பட்டப்படிப்பிற்குப் பின் 9.4 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆய்வு படிப்பிற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.

👉தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் அளவு 26.3 சதவீதமாக உள்ளது. இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் மாணவிகள் அதிகளவில் உயர்கல்விக்கு செல்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉பி.எஸ்.சி., பி.காம்., படிப்புகளுக்கு பிறகு பி.ஏ., பட்டப்படிப்பை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்வதாகவும் இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                
என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926


Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment