கூடுதல் செய்திகள் 25/09/2019


⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹செய்தி 1🌹


🌹👉கம்மல், மூக்குத்தி, கொலுசு அணிந்து வர தடை: ஆசிரியர் பணி தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு*


🌹👉முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்போர், கம்மல், மூக்குத்தி, கொலுசு, மோதிரம் உள்ளிட்ட நகைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியில், 2,144 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், வரும், 27, 28, 29ம் தேதிகளில், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும், 30 மாவட்டங்களில், 154 மையங்களில், தேர்வறைகள் அமைக்கப்பட்டு உள்ளன*

இந்த தேர்வை, 1.22 லட்சம் பெண்கள், 3,389 மாற்று திறனாளிகள், எட்டு திருநங்கையர் உட்பட, 1.85 லட்சம் பேர் எழுத உள்ளனர். மொத்தம், 17 பாடப்பிரிவுகளில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறதுஇது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், லதா கூறியதாவது*
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில், 150 மதிப்பெண்களுக்கு, 180 நிமிடங்கள் தேர்வு நடத்தப்படும். ஒரே நேரத்தில், 33 ஆயிரம் கணினிகள் பயன்படுத்தப்படும். பாதுகாப்பான, வேகமாக இயங்கும், 'சர்வர்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது*

தேர்வர்களை ஆறு பிரிவுகளாக பிரித்து, மூன்று நாட்கள், காலை மற்றும் பிற்பகல் என, தேர்வு நடக்கிறது. சர்வதேச அளவிலான கணினி வழி தேர்வில் பின்பற்றப்படும், அனைத்து பாதுகாப்பு முறைகளையும் செய்துள்ளோம்*

ஒவ்வொரு தேர்வருக்கும், குறிப்பிட்ட இடைவெளி இருக்கும். ஒரு தேர்வரின் வினாத்தொகுப்பு, இன்னொரு தேர்வருக்கு இருக்காது. காப்பி அடிப்பது, பதில் கேட்டு எழுதுவது போன்ற முறைகேடுகளுக்கு வழியில்லை. பதிவு மூப்பின்படி, ஆன்லைன் வழியாக, தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன*

தேர்வில் கேள்விகளை வரிசையாகவோ, முன், பின்னாகவோ தேர்வு செய்து, விடை எழுதலாம். தேர்வு நேரம் கணினியில் தானியங்கி முறையில் செயல்படும். மூன்று மணி நேரம் முடிந்ததும், தேர்வர்களின் விடைகள் தானாகவே உள்ளீடு செய்யப்படும்

தேர்வு முடிந்த பின், ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடும் நாளில், விடைத்தாள் நகல் ஆன்லைனில் வழங்கப்படும். தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும். பெரிய பொத்தான், உலோக பொருட்கள் அடங்கிய, உடைகளை அணிய வேண்டாம் தலையில் கிளிப், கழுத்து நகை, ஆபரணம், கம்மல், மூக்குத்தி, மோதிரம், நெற்றிச்சூடி, வளையம், கொலுசு உள்ளிட்ட எந்த ஆபரணமும் அணிந்து வரக்கூடாது. மெட்டிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்*

தேர்வு மையங்களின் பாதுகாப்பு கருதி, போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, தேர்வர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்*

பேட்டியின் போது, ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர்கள், அறிவொளி, உமா, இணை இயக்குனர், நரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்*

பயோமெட்ரிக்' பதிவு

ஹால் டிக்கெட், அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும். கைக்குட்டை, தண்ணீர் பாட்டிலுக்கு தடை இல்லை. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். ஷூ, சாக்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் மின்னணு பொருட்களுக்கு அனுமதியில்லை ஒவ்வொரு தேர்வரும், பயோமெட்ரிக்கில் விரல் ரேகை வைத்த பின்பே உள்ளேயும், வெளியேயும் அனுமதிக்கப்படுவர். தேர்வு நேரம் முடியும் வரை, தேர்வர்கள் வெளியே வர முடியாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
   
🌹செய்தி 2🌹

🌹🌹பி.எட்., மாணவர் சேர்க்கை ஆசிரியர் பல்கலை, அட்வைஸ்

🌹👉மாணவர் சேர்க்கையை, வரும், 30ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளும்படி, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் பல்கலை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் உள்ள, 700க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு பி.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை, ஜூலை முதல் நடந்து வருகிறது மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்ததாலும், சில பல்கலைகளின் தேர்வு முடிவுகள் வர தாமதமானதாலும், செப்டம்பர் வரை மாணவர்களை சேர்க்க சலுகை அளிக்கப்பட்டது*
இதன்படி, வரும், 30ம் தேதிக்குள், மாணவர் சேர்க்கையை முடித்து, பட்டியலை பல்கலையில் தாக்கல் செய்யும்படி, கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர், பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சேர்க்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள், கல்லுாரி வாரியாக, அடுத்த மாதம், 8ம் தேதி முதல் சரிபார்க்கப்பட உள்ளன*
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹செய்தி 3🌹

🌹🌹8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை உதவித் தொகை: என்எம்எம்எஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

👉எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மத்திய அரசின் சார்பில் உதவி தொகை வழங்கப்படுகிறது
👉இதற்காக என்.எம்.எம்.எஸ். என்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான தேர்வு டிச. 1ல் நடத்தப்படுகிறது. இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன
👉விண்ணப்ப பிரதிகளை www.dge.tn.gov.in என்ற இணை
யதளத்தில் நாளை முதல் அக். 11 வரை பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக். 16க்குள் தலைமை ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார்*


🌹விண்ணப்பிக்க தகுதியுடையோர்🌹

👉மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளி) நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்*
👉இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும்

👉புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ செலுத்தி அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்

👉தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்

🌹தேர்வு முறை🌹

👉என்எம்எம்எஸ் தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி-1-இல் மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு (Mental Ability Test-MAT) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். பகுதி 2-இல் படிப்பறிவுத் தேர்வு , (www.dge.tn.gov.in) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment