வரலாற்றில் இன்று 23/07/2019


          🌹செவ்வாய் 🌹



 ✍🏼பதிவு நாள்: 23-07-2019

ஜூலை 23  கிரிகோரியன் ஆண்டின் 204 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 205 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 161 நாட்கள் உள்ளன.

🔵நிகழ்வுகள்

🖌811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார்.

🖌1632 – புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர்.

🖌1793 – புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின்  மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

🖌1813 – மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

🖌1829 – ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் "டைப்போகிராஃபர்  என்ற முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப்  பெற்றார்.

🖌1840 – கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

🖌1874 – இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

🖌1881 – சிலிக்கும் அர்கெந்தீனாவுக்கும்  இடையில் எல்லை உடன்பாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டது.

🖌1885 – அமெரிக்க அரசுத்தலைவர் யுலிசீஸ் கிராண்ட் தொண்டைப் புற்றுநோய்  காரணமாக இறந்தார்.

🖌1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை விற்றது.

🖌1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின்  கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு  காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர்  ஆரம்பமானது.

🖌1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி  ஆரம்பிக்கப்பட்டது.

🖌1927 – அனைத்திந்திய வானொலியின்  முதலாவது வானொலி நிலையம் பம்பாய்  நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.

🖌1929 – இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.

🖌1942 – பெரும் இன அழிப்பு: போலந்தில்  திரெப்ளிங்கா வதை முகாம் யூதர்களுக்காகத் திறக்கப்பட்டது.

🖌1942 – பல்கேரியக் கவிஞரும், கம்யூனிசத் தலைவருமான நிக்கோலா வப்த்சாரொவ் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

🖌1952 – எகிப்தியப் புரட்சி: எகிப்தின்  பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜமால் அப்துல் நாசிரின்  பின்னணியில் இராணுவத் தளபதி முகமது நாகிப் ஆரம்பித்தார்.

🖌1961 – நிக்கராகுவாவில் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி  அமைக்கப்பட்டது.

🖌1962 – லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில்  கைச்சாத்திடப்பட்டது.

🖌1967 – அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள்  செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

🖌1968 – இசுரேலிய போயிங் 707 விமானம் 48 பேருடன் மூன்று பாலத்தீனத்  தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டது. 40 நாட்களின் பின்னர் 16 அரபுப் போர்க் கைதிகளின் விடுவிப்புடன் கடத்தல் முடிவுக்கு வந்தது.

🖌1970 – ஓமானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சுல்தான் சயீது பின் தைமூர் அவரது மகன் காபூசு இப்னு சஈத் ஆலு சஈத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

🖌1974 – கிரேக்க இராணுவ ஆட்சி கலைந்தது. கிரேக்கத்தின் முன்னாள் பிரதமர் கான்ஸ்தந்தீனசு கரமான்லிசு புதிய அரசை அமைக்க அழைக்கப்பட்டார்.

🖌1980 – வியட்நாமைச் சேர்ந்த பாம் துவான் சோவியத்தின் சோயுஸ் 37 விண்கலத்தில் விண்ணுக்கு சென்ற முதலாவது ஆசியர்  என்ற பெருமையைப் பெற்றார்.

🖌1981 – இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

🖌1983 – திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி  இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

🖌1983 – கறுப்பு யூலை: இலங்கையில்  இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.

🖌1988 – பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.

🖌1992 – அப்காசியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

🖌1992 – தற்பால்சேர்க்கையாளர்களின்  உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை யோசப் ரட்சிங்கர்  தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.

🖌1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

🖌1999 – தோக்கியோ நகரில் யப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன் கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார்.

🖌1999 – சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.

🖌1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில்  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.

🖌2005 – எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

🖌2015 – கெப்லர்-452பி என்ற புறக்கோள்  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.

🔵பிறப்புகள்

🖌1656 – குரு அர் கிருசன், சீக்கிய குரு (இ. 1664)

🖌1856 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1920)

🖌1890 – பெரி. சுந்தரம், இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1957)

🖌1892 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (இ. 1975)

🖌1898 – தாராசங்கர் பந்தோபாத்தியாய், வங்காள எழுத்தாளர் (இ. 1971)

🖌1906 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)

🖌1928 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர்

🖌1934 – நிர்மலா ஜோஷி, இந்தியக் கத்தோலிக்க அருட்சகோதரி (இ. 2015)

🖌1936 – அந்தோணி கென்னடி, அமெரிக்க வழக்கறிஞர்

🖌1947 – எல். சுப்பிரமணியம், தமிழக வயலின் கலைஞர்

🖌1951 – அஜித் ஜெயின், இந்தியத் தொழிலதிபர்

🖌1953 – கிரகாம் கூச், ஆங்கிலேயத் துடுப்பாளர்

🖌1953 – நஜீப் துன் ரசாக், மலேசியாவின் 6வது பிரதமர்

🖌1957 – தியோ வான் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (இ. 2004)

🖌1967 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (இ. 2014)

🖌1973 – ஹிமேஷ் ரேஷாமியா, இந்தியப் பாடகர், நடிகர்

🖌1975 – சூர்யா, தமிழக நடிகர்

🖌1976 – பவதாரிணி, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி

🖌1976 – ஜூடிட் போல்கர், அங்கேரிய சதுரங்க வீரர்

🖌1982 – பவுல் வெஸ்லி, அமெரிக்க நடிகர்

🖌1989 – டேனியல் ராட்க்ளிஃப், ஆங்கிலேய நடிகர்

🔵இறப்புகள்

🖌1577 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலிய கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (பி. 1504)

🖌1885 – யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்காவின் 18வது அரசுத்தலைவர் (பி. 1822)

🖌1925 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)

🖌1927 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவத் தளபதி (பி. 1864)

🖌1942 – வால்டெமர் பவுல்சன், டென்மார்க் பொறியியலாளர் (பி. 1869)

🖌1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்

🖌1957 – பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)

🖌1974 – ஹரி கிருஷ்ண கோனார், இந்திய மேற்கு வங்க அரசியல்வாதி (பி. 1915)

🖌1976 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (பி. 1890)

🖌1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலி அறிவிப்பாளர்

🖌2004 – மெஹ்மூத், இந்தி சிரிப்பு நடிகர் (பி. 1932)

🖌2012 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (பி. 1951)

🖌2012 – இலட்சுமி சாகல், இந்திய அரசியல்வாதி (பி. 1914)

🖌2013 – மஞ்சுளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1953)

🖌2014 – சி. நயினார் முகம்மது, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர்

🖌2016 – சையது ஐதர் ராசா, இந்திய-பிரான்சிய ஓவியர் (பி. 1922)

🔵சிறப்பு தினம்

🖌குழந்தைகள் தினம் (இந்தோனேசியா)

🖌புரட்சி தினம் (எகிப்து, 1952)

🌹தொகுப்பு

 🔵நாடும் நடப்பும்
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment