இன்றைய செய்திகள் 9.08.2019(வெள்ளிக்கிழமை)

இன்றைய செய்திகள்
9.08.2019(வெள்ளிக்கிழமை)




🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



📘📕அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் அனைத்து துறைகளுக்கும் மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவிறுத்தியுள்ளது.


📘📕 2120 பேராசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு - அரசாணை எண் : 191, நாள் : 06.08.2019


📘📕ஆசிரியர்களை மந்தனப்பணிக்கு பணி விடுப்பு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


📘📕EMIS வலைதளத்தில் தினமும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்வெளியீடு


📘📕DGE - முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாகப் பணி இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு


📘📕திருவள்ளூர்‌,சென்னை முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்


📘📕10 ஆண்டுகளில் அரசு பள்ளியே இருக்காது - கல்வியாளர்கள் அதிர்ச்சி- பத்திரிகைச் செய்தி
📘📕முதுகலை மருத்துவப் படிப்புக்கான, நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை குறைக்க கோரிய வழக்கில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


📘📕ஜி.ஆர்.இ.:வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய பிரதான தேர்வுகளில் ஒன்று, ஜி.ஆர்.இ., எனும் கிராஜுவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷன்ஸ்.                           📘📕53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்(விரிவான செய்திக்கு கூடுதல் செய்திகள் படிக்கவும்)



📘📕அரசுப்பள்ளியில் அடிப்படை ஆங்கில வார்த்தை கூட மாணவர்களுக்கு எழுதத் தெரியவில்லை- இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பள்ளி ஆய்வில் தகவல்(பத்திரிகை செய்தி)


📘📕பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்


📘📕போதிய மாணவர்கள் இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் மற்றும்  பாடமாற்றம் செய்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம் வழங்க இயக்குநர் உத்தரவு                                                         📘📕கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


📘📕சட்ட விரோதமாக பேனர் வைப்பதை தடுக்க மாநில அரசிடம் எந்த திட்டமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

                                       📘📕ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலுக்கும் பாகிஸ்தான் துணை போகக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.


📘📕கிரிக்கெட் அரங்கில் புதிய முயற்சியாக 'நோ பால்' என அறிவிக்க 'டிவி' அம்பயர்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது.                       

                                          📘📕அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்மைத்தன்மை பெற விண்ணப்ப கட்டணம் ரூ600 லிருந்து 1000 மாக உயர்ந்துள்ளது.
📘📕நர்சிங், பி.பார்ம் படிப்புகள்: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               


என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment