வரலாற்றில் இன்று 22/07/2019

வரலாற்றில் இன்று 22/07/2019


                🌹திங்கள் 🌹

 ✍🏼பதிவு நாள்:22-07-2019

ஜூலை 22  கிரிகோரியன் ஆண்டின் 203 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 204 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 162 நாட்கள் உள்ளன.

🔵நிகழ்வுகள்

🖌838 – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.

🖌1099 – முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின்  முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

🖌1298 – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப்  படைகளையும் தோற்கடித்தார்.

🖌1456 – அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார்.

🖌1499 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிசுப்  படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

🖌1587 – அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின்  இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர்.

🖌1706 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றிணைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக வழிவகுத்தது.

🖌1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: எசுப்பானிய, பிரித்தானியக் கடற்படைகளுக்கிடையே சமர் மூண்டது. இதன்போது ஹோரஷியோ நெல்சன்  கையில் படுகாயமடைந்து, கையின் ஒரு பகுதியை இழந்தார்.

🖌1802 – பேரரசர் கியா லொங் அனோய்  நகரைக் கைப்பற்றி வியட்நாமை  ஒன்றிணைத்தார்.

🖌1812 – நெப்போலியப் போர்கள்: வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் எசுப்பானியாவில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

🖌1823 – யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர்  தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

🖌1916 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.

🖌1933 – தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து நியூயார்க்கை வந்தடைந்தார்.

🖌1942 – இரண்டாம் உலகப் போர்: போர்க்காலத் தேவைக்காக அமெரிக்காவில் பெட்ரோல் பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

🖌1942 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவில் இருந்து யூதர்களின்  நாடுகடத்தல் ஆரம்பமானது.

🖌1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: நேச நாடுகள் பலெர்மோவைக் கைப்பற்றின.

🖌1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாட்சிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

🖌1946 – எருசலேமில் கட்டளைப் பலத்தீனின்  நிர்வாக மையம் அமைந்திருந்த கட்டடத்தில் சியோனிஸ்டுகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 91 பேர் கொல்லப்பட்டனர்.

🖌1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

🖌1963 – முடிக்குரிய குடியேற்றமான சரவாக்  சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு செப்டம்பர் 16 இல் இது மலேசியக் கூட்டமைப்பில்  சேர்த்துக் கொள்ளப்பட்டது.

🖌1976 – இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பீன்சில் சப்பான் இழைத்த போர்க் குற்றங்களுக்கான இழப்பீட்டை சப்பான் முழுமையாகச் செலுத்தியது.

🖌1977 – சீனத் தலைவர் டங் சியாவுபிங்  மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

🖌1983 – போலந்தில் இராணுவச் சட்டம் அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.

🖌1992 – மெதெயின் அருகே, கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல்காரர் பப்லோ எசுகோபர் சிறையில் இருந்து தப்பினார்.

🖌1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர்  மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

🖌2003 – ஈராக்கில் சதாம் உசேனின்  புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

🖌2009 – 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.

🖌2011 – நோர்வேயில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மொத்தம் 77 பேர் கொல்லப்பட்டனர்.

🖌2013 – சீனாவில் டிங்கி என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் 89 பேர் உயிரிழந்தனர்.

🔵பிறப்புகள்

🖌1559 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619)

🖌1647 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சியப் புனிதர் (இ. 1690)

🖌1784 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1846)

🖌1904 – தொ. மு. பாஸ்கர தொண்டைமான், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1965)

🖌1915 – வாணிதாசன், புதுவைக் கவிஞர் (இ. 1974)

🖌1921 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், திரைப்பட இயக்குநர் (இ. 1979)

🖌1923 – முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976)

🖌1933 – ஸ்ரீதர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா (இ. 2008)

🖌1937 – வசந்த் ரஞ்சானே, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)

🖌1943 – மசாரு இமோடோ, சப்பானிய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 2014)

🖌1944 – ஆனந்த் சத்தியானந்த், நியூசிலாந்தின் 19வது ஆளுநர்

🖌1947 – ஜில்ஸ் டுசப், கனடிய அரசியல்வாதி

🖌1948 – அல்போன்சோ கனோ, கொலம்பிய மார்க்சியவாதி (இ. 2011)

🖌1953 – எஸ். பி. சைலஜா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகி

🖌1970 – தேவேந்திர பத்னாவிசு, மகாராட்டிராவின் 18வது முதலமைச்சர்

🖌1982 – தில்ருவன் பெரேரா, இலங்கை துடுப்பாட்ட வீரர்

🖌1983 – நுவன் குலசேகர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

🖌1992 – செலெனா கோமஸ், அமெரிக்க நடிகை, பாடகி

🖌1996 – சகிளீர் கிசோண்டோ, அமெரிக்க நடிகர்

🖌2013 – கேம்பிரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ்

🔵இறப்புகள்

🖌1619 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559)

🖌1676 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை)  (பி. 1590)

🖌1826 – கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1746)

🖌1832 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (பி. 1811)

🖌1967 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1878)

🖌1968 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளி (பி. 1886)

🖌1972 – டி. எஸ். பாலையா, தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1914)

🖌1995 – சிவகுமார் ராய், இந்திய எழுத்தாளர் (பி. 1919)

🖌1996 – நாரண. துரைக்கண்ணன், தமிழக்ப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1906)

🖌2012 – டொன் பொஸ்கோ, இலங்கையின் நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகர்

🖌2013 – தங்கராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்

🖌2015 – அ. செ. இப்ராகிம் இராவுத்தர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்

🔵சிறப்பு தினம்

🖌பை தினம்

🖌புரட்சி தினம் (காம்பியா)

🖌மகதலேனா மரியாள் திருவிழா தினம்.

 🔵நாடும்  நடப்பும்
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment