வரலாற்றில் இன்று 21/07/2019 -

வரலாற்றில்  இன்று 
21/07/2019 - ஞாயிறு 
========================



21/07/கி.மு.356-
ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேக்க கோயில் (ஆர்ட்டெமிஸ்) தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

21/07/365- கிரேக்கத்தின் கிரேட் தீவில் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில் லிபியா, அலெக்சாண்ட்ரியா பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் .

21/07/1658 -
ஔரங்கசீப் டெல்லி அரியணையைக் கைப்பற்றியதைக் கொண்டாடினார்.

21/07/1831- பெல்ஜியம் மன்னராக லியோபோல்ட் அரியணை ஏறினார்.

21/07/1841-
ஹாங்காங்கில் ஏற்பட்ட கடும் புயலில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

21/07/1877- அமெரிக்காவில் 17ம் தேதி துவங்கிய ரயில்வே வேலை நிறுத்தம் வன்முறையில் இறங்கியது. போலீசுக்கும் தொழிலாளர்களுக்கும் நடந்த மோதலில் 26 பேர் உயிரிழந்தனர். தண்டவாளங்கள் 
தகர்த்து எறியப்பட்டன. ரயில்வே தொழிற்சாலை தீக்கிரையாக்கப் பட்டது .

21/07/1889- முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை காலமானார் .

21/07/1907- கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.

21/07/1919- ருமேனியாவில், ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்து நாடெங்கும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றது. 

21/07/1925-  அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை கற்பித்த ஆசிரியருக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

21/07/1946- உலக அளவில் பற்றாக்குறை காரணமாக பிரிட்டனில் ரொட்டிக்கு ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது.

21/07/1947- இந்திய தேசியக் கொடியை அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 

21/07/1954- ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

21/07/1960- சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். 

21/07/1964- சிங்கப்பூரில் மலாய் இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்தனர்.

21/07/1969- 
யுவவாணி அலைவரிசை ஒலிபரப்பு முதன்முதலாக டெல்லி வானொலி நிலையத்தில் இருந்து ஆரம்பமானது.

21/07/1970 -எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.

21/07/1973- 
மருரோவா குன்றில் பிரான்ஸ் அணு ஆயுத சோதனையை நடத்தியது.

21/07/1977- லிபியா- எகிப்து போர் ஆரம்பமானது. இது நான்கு நாட்கள் நீடித்தது .

21/07/1984- தினமலர் பத்திரிகையின் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் காலமானார். 

21/07/1988- இஸ்லாமாபாத் அருகே ஒரு பஸ் பாலத்தை கடக்கும் போது திடீரென வெள்ளம் வந்து பஸ்ஸை அடித்துச் சென்றதில் 71  பயணிகள் உயிரிழந்தனர்.

1988 - சீனாவின் லிசான் எனுமிடத்தில் மின் நதியை கடந்து செல்லும் போது படகு கவிழ்ந்து 133 பேர் பலியானார்கள்.

21/07/2001-நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலமானார். 

21/07/2007- ஹாரிபாட்டர் தொடர் நாவலின் கடைசி பாகம் வெளிவந்தது.

21/07//2008- ராம் பரன் யாதவ் நேபாளத்தின் முதலாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
---------------------------------------------------------------------------------
🔵 வரலாற்றில் இன்று 🇵🇾


              🌹ஞாயிறு 🌹

✍🏼பதிவு நாள்: 21.07.2019

ஜூலை 21 கிரிகோரியன் ஆண்டின் 202 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 203 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 163 நாட்கள் உள்ளன.

🔵நிகழ்வுகள்

🖌கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

🖌1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின.

🖌1718 – ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.

🖌1774 – ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

🖌1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.

🖌1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

🖌1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது நிறைவடைந்தது).

🖌1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

🖌1961 – நாசாவின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.

🖌1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.

🖌1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.

🖌1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.

🖌1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

🖌2007 – ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

🔵பிறப்புகள்

🖌1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

🖌1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (இ. 2014)

🔵இறப்புகள்

🖌1920 – அன்னை சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)

🖌1926 – ஃபிரெடெரிக் ஹன்டர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பி. 1886)

🖌1998 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (பி. 1923)

🖌2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

🖌2009 – கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913)
2010 – டேவிட் வாரன், கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர்.

🔵சிறப்பு தினம்

🖌பெல்ஜியம் – தேசிய தினம்

🖌பொலீவியா – மாவீரர் தினம்

🖌குவாம் – விடுதலை தினம் (1944)

🖌சிங்கப்பூர் – இன சமத்துவ தினம்.

🌹தொகுப்பு

 🔵நாடும்  நடப்பும்
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment