யார் Income tax கட்ட வேண்டும்?

யார் Income tax கட்ட வேண்டும்? 


வருமான வரி கட்டுவது ஒவ்வொருவரினதும் ஜனநாயக கடமை, வரி ஏய்ப்பு செய்தால் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும். வருமான வரி யார் யார் கட்ட வேண்டும்? எப்படி கட்ட வேண்டும்? என்று பார்க்கலாம். யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும்? இந்த ஆண்டு முடிந்த பின், நம் மொத்த வருமானத்தை கணக்கிட வேண்டும். 



மாத சம்பளம் போக, வங்கிக் கணக்கில் வரும் வட்டி, வீட்டை வாடகைக்கு விட்டதால் கிடைத்த வருமானம் என்று வருமானங்களைக் கணக்கிட்டு, அதற்காக வரியை நிர்ணயிக்க வேண்டும். இதில் சில விலக்குகளும் உண்டு, அதாவது கம்பெனி பங்குகளில் வரும் ஈவுத்தொகைக்கு (டிவிடெண்ட்) பத்து லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. 



நீங்கள் வீடு கட்ட கடன் வாங்கியிருந்தால், அதற்காக நீங்கள் கட்டும் வட்டியையும், அசலையும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, உங்கள் வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம். மேலும் சில விதிமுறைகளின் கீழ், ஆயுள் காப்பீட்டு பிரிமியம், மருத்துவச் செலவு காப்பீட்டிற்கான செலவு, உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவற்றை உங்கள் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் இறுதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்! இந்த கழிவுகளுக்கு பின் இருக்கும் தொகை, உங்கள் நிகர வருமானம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக் களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது. 



80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது. கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால். பங்குகள், மியூச்சுவல் யூனி ட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால். நீங்கள் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும்.
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment