வரலாற்றில் இன்று

வரலாற்றில்  இன்று 18.07.2019



18/07/64- ரோம் நகரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ரோம் நகரிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் தங்கியிருந்த நீரோ மன்னன் தலைமை தாங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். (நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பது வதந்தியே அக்கால கட்டத்தில் பிடில் இசைக்கருவி வழக்கத்தில் இல்லை.1556 - ல் தான் இக்கருவி கண்டுபிடிக்கப் பட்டது.)

18/07/1290- 
முதலாம் எட்வர்ட்  இங்கிலாந்தில் உள்ள அனைத்து  யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.

18/07/1389- நூறாண்டு போருக்குப் பின் பிரான்ஸும், இங்கிலாந்தும் அமைதி உடன்பாடு செய்து கொண்டது. அடுத்த பதிமூன்று ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.

18/07/1806 -மால்டா,
பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

18/07/1841- இரண்டாம் பெதுரோ பிரேசில் அரசராக முடி சூடினார். 

18/07/1857- இந்தியாவின் இரண்டாவது பல்கலைக்கழகமான "பம்பாய் பல்கலைக்கழகம்" திறக்கப்பட்டது. 

18/07/1916- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர் .

18/07/1917- கொலை செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் லெனின்  தலைமறைவானார்.

1917- ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் 
பிராவ்தா அலுவலகத்தைத் தாக்கி நாசமாக்கினர். 

18/07/1918-  ஹங்கேரி பாராளுமன்றம் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க மறுத்துவிட்டது.

18/07/1923-பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டது.

18/07/1925- சென்ற ஆண்டு சிறையில் இருந்த போது ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் (எனது போராட்டம்) எனும் புத்தகத்தின் முதல் பாகம் வெளிவந்தது.

18/07/1940- செக்கோஸ்லோவாகியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே நட்புறவு ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது.

18/07/1942- இரண்டாம் உலகப் போர்: நார்வேயில் 
யுகோஸ்லோவியாப் போர்க்கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

18/07/1944-  இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பான் பிரதமர் பதவி துறந்தார்.

18/07/1955- அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் கலந்து கொண்ட முதல் ஜெனீவா  உச்சிமாநாடு  ஜெனீவாவில் நடந்தது.

18/07/1964- ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், மழையினாலும் 180 பேர் உயிரிழந்தனர். 44 ஆயிரம் பேர் வீடிழந்தனர். 

18/07/1966- நாசாவின் ஜெமினி- 10 விண்கலம் ஏவப்பட்டது.

18/07/1968 -தமிழக சட்டமன்றம் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றி அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

1968- இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ கலிபோர்னியாவில் நிறுவப் பட்டது. 

18/07/1973-ஆல்ப்ஸ் மலை சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் ஆற்றில் விழுந்ததில் பெல்ஜியத்தைச்  சேர்ந்த 43 பயணிகள் உயிரிழந்தனர்.

18/07/1977- வியட்னாம் 
ஐ.நா.சபையில் இணைந்தது.

18/07/1980-  ரோகிணி - 2 எனும் செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டது.

1980- இந்தியாவில் முதன் முதலாக வண்ண ஒளிபரப்பை சென்னைத் தொலைக்காட்சி நிலையம் பரிசோதனை முறையாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பியது.

18/07/1982- குவாட்டமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர், ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

18/07/1984- கலிபோர்னியாவில் 
மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.

18/07/1986-
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுப்பதை மத்திய அரசு தடை செய்தது.

18/07/1994-  அர்ஜென்டினாவில் புவனஸ் ஐரிஸ் நகரில் யூத சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

18/07/1995-  கரீபியன் தீவான 
மொன்செராட்டில் எரிமலை வெடித்து சிதறியதன்  காரணமாக, தலைநகரம்  அழிந்ததுடன் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.

18/07/1996- முல்லைத்தீவு, இலங்கைப் படை முகாமை  விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப் பட்டது .
1,200 படையினர் கொல்லப்பட்டனர்.

18/07/1997-  மும்பையில் 10 சிறுவர்கள் காவல் துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8,000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

18/07/2007- மும்பையில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

A Srinivasan

Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment