வரலாற்றில் இன்று 28/07/2019

வரலாற்றில்  இன்று
28/07/2019-ஞாயிறு
=========================


28/07/1493- மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது .

28/07/1586 -சர் தாமஸ் ஹாரியட் என்பவர் முதன் முதலாக உருளைக்கிழங்கை ஐரோப்பா முழுவதிலும் அறிமுகப் படுத்தினார் .

28/07/1609- பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர் .

28/07/1637- கனெக்டிகட் படை நியூ ஹேவன் பகுதியில் நடந்தப் போரில் பெக்யோட் இனத்தவர்களில் எஞ்சியிருந்தவர்களை அடியோடு
அழித்தது.

28/07/1777-
வெர்மாண்டில், சொத்துரிமை இல்லாத அனைத்து ஆண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

28/07/1794- பாரிஸ் நகரில் பிரெஞ்சு புரட்சியாளர்
ரோப்ஸ்பியரின் தலை கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டது.

28/07/1801- மலபார் புரட்சி தலைவர்களான சாத்தப்பன்
நம்பியாரும் ,
சோயன் சந்துவும் கொல்லப்பட்டனர்.

28/07/1821- பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது .

28/07/1858- கைரேகை பதிவு செய்யும் பழக்கம் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகமானது.
ICS அதிகாரியான வில்லியம் ஹெர்ஷல் எனும் ஆங்கிலேயர் வங்காளத்தின் ஜங்கிப்பூரில் ஒரு கான்ட்ராக்டரிடம்  ஒப்பந்தப் பத்திரத்தில் கைரேகையை பதிவு செய்தார் .

28/07/1862- நைல் நதி விக்டோரியா ஏரியில் இருந்து உற்பத்தி ஆகிறது என்பதை ஜான் ஹானிங் என்பவர் கண்டுபிடித்தார் .

28/07/1868- ஆப்ரிக்க- அமெரிக்கர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மூலம் அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது .

28/07/1909- ஸ்பெயினில் உள்நாட்டு போர் காரணமாக ராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

28/07/1914- முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. செர்பியா மீது ஆஸ்திரியா, ஹங்கேரி போர் தொடுத்தன.

28/07/1915- அமெரிக்காவின்
ஹெயிட்டி மீதான 19 ஆண்டுகால  ஆக்கிரமிப்பு ஆரம்பமானது .

28/07/1917- ஆப்பிரிக்க- அமெரிக்கர் மீது நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து நியூயார்க்கில் அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றன .

28/07/1918-
பிரேஸிலில் ஜெர்மனி வங்கிகளை மூடும்படி அரசு உத்தரவிட்டது.

28/07/1937- ஜப்பான் பீஜிங் நகரைக் கைப்பற்றியது.

28/07/1942-  ஜெர்மனி, ரோஸ்டோவ் ஆன்,டான் எனும் ரஷ்ய நகரைக் கைப்பற்றியது .

28/07/1943- இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனியின்  ஹாம்பர்க் நகர் மீது பிரிட்டன் குண்டு தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 பேர் உயிரிழந்தனர்.

1943-இத்தாலியில் பாசிஸ்ட் கட்சி கலைக்கப் பட்டது.

28/07/1945- அமெரிக்க போர் விமானம் ஒன்று
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79 ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

28/07/1956- பிரிட்டனில் உள்ள எகிப்தின் சொத்துக்களை பிரிட்டன் முடக்கியது. சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கியதை பிரிட்டன்  ஏற்கவில்லை.

28/07/1957- ஜப்பானின்
மேற்கு கியூசூ , இசகாயா என்ற இடத்தில் மழை மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் உயிரிழந்தனர்.

28/07/1965- வியட்நாம் போர் :  தெற்கு வியட்நாமில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை
75 ,000 லிருந்து 1,25,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் அறிவித்தார் .

28/07/1976- சீனாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் தொழில் நகரமான டங்ஷான் தரைமட்டமானது .
2,42,769 பேர்  உயிரிழந்தனர்.
1,64,851 பேர் காயமடைந்தனர்.

28/07/1979- பாராளுமன்றத்தை சந்திக்காமல் ஐந்து மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த சரண்சிங் இந்தியாவின் ஏழாவது பிரதமராக பதவி ஏற்றார்.

28/07/1984-
23-வது ஒலிம்பிக் பந்தயம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் துவக்கி வைக்கப்பட்டது .
140 நாடுகளைச் சேர்ந்த 7,078 பேர் கலந்து கொண்டனர். (ரஷ்யா கலந்து கொள்ளவில்லை)

28/07/1997- கேரள உயர் நீதிமன்றம்
'பந்த் சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது' என்று தீர்ப்பு வழங்கியது .

28/07/2005 -ஐரியக் குடியரசுப் படை வட அயர்லாந்தின் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தது.

28/07/2006- இலங்கை போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.

28/07/2010- இஸ்லாமாபாத் வடக்கே பாகிஸ்தானின் ஏர்
ப்ளூ விமானம்  விழுந்ததில் அதில் பயணம் செய்த 152 பேரும் உயிரிழந்தனர்.

28/07/2017 - ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உச்ச நீதிமன்றத்தினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
A Srinivasan -Kpm
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment