காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 25/07/2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்

25-07-2019



இன்றைய திருக்குறள்

குறள் -606

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
 மாண்பயன் எய்தல் அரிது.

மு.வ உரை:

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

கருணாநிதி  உரை:

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

✡✡✡✡✡✡✡✡

பொன்மொழி

இனிப்புச் சுவை என்பது சர்க்கையின் குணமல்ல. நம்முடைய குணமும் அல்ல. சர்க்கரைத் துகள்களோடு ஒன்றும்போது அந்த இனிப்பு என்ற விஷயத்தை உணர்கிறோம்.
- அப்துல் கலாம்.

♻♻♻♻♻♻♻♻

பழமொழி

Eagles don’t catch files.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

✳✳✳✳✳✳✳✳

Important Used Words

 Rind, Skin பழத்தோல்

 Rose ரோஜா

 Sago சவ்வரிசி

 Sabre Bean அவரைக்காய்

 Snake-gourd புடலங்காய்

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

 Today's grammar

Adjectives

Where a number of adjectives are used together, the order depends on the function of the adjective. The usual order is:

Value/opinion, Size, Age/Temperature, Shape, Colour, Origin, Material

Order of adjectives
Value/opinion - delicious, lovely, charming.

Size - small, huge, tiny

Age/Temperature - old, hot, young

Shape - round, square, rectangular

Colour - red, blonde, black

Origin - Swedish, Victorian, Chinese.

Material -plastic, wooden, silver
📫📫📫📫📫📫📫📫

அறிவோம் தமிழ்

      பொருள்
பொருள் இரண்டு வகைப்படும். அவை,

1. அகப்பொருள்
2. புறப்பொருள்

தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

✍✍✍✍✍✍✍✍

பொது அறிவு

1.எது பாலைவனம் இல்லாத கண்டம்?

           ஐரோப்பா

2. தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு எது?
                                கோதாவரி ஆறு

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

இன்றைய கதை

சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம்
 போரில் தோல்வி அடைந்த அரசன் ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்குள் சென்று ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

 ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. குகையின் ஒரு பகுதியில் ஒரு வலையைப் பின்ன முயற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். சிலந்தி சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையில் பின்னிய நூல் அறுந்து கீழே விழுந்து விட்டது.

 இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும் அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் சோம்பலடைய வேண்டும்?

 நானும் மீண்டும் முயற்சி செய்வேன் என்று மனதிற்குள் எண்ணினான். உடனே அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

 தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

நீதி :

தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

செய்திச் சுருக்கம்

🔮குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.

🔮சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.

🔮மருத்துவக் கழிவுகளை சரியாக கையாளாத மாநிலங்கள் மாதம் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை.

🔮ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததை அடுத்து பரிசல் இயக்க 2-வது நாளாக தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

🔮மகாபுஷ்கரணியை தொடர்ந்து தாமிரபரணி அந்திம புஷ்கர விழா: அக்டோபரில் கொண்டாட முடிவு.

🔮நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

🔮அசாம் வெள்ளத்தில் காண்டாமிருகங்கள் உள்பட 200-க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழப்பு.

🔮டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை 85 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து.

🔮சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குலசேகரா அறிவிப்பு.

🔮Chandrayaan-2 moving in 'right direction', in 'good health': ISRO.

🔮Rare Rhinos Among More Than 200 Animals Killed In Assam Floods.

🔮CBSE schools to have sports period daily for classes 1 to 12, new curriculum introduced.

🔮Eight women fighter pilots in IAF as on July 1: Govt.

🔮England vs Ireland, Lord's Test match | England bowled out for 85 by Ireland.

♻♻♻♻♻♻♻♻

தொகுப்பு

T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment