காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் 19/07/2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் 19/07/2019


இன்றைய திருக்குறள்



குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
 கணமேயும் காத்தல் அரிது.

மு.வ உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

கருணாநிதி  உரை:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

சாலமன் பாப்பையா உரை:
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

✡✡✡✡✡✡✡✡

பொன்மொழி

எந்த குடும்பத்தில் பெண்மையை கொண்டாட படவில்லையோ அந்த வீடும் பாழ், நாடும் பாழ்;
- சுவாமி விவேகானந்தர்

♻♻♻♻♻♻♻♻

பழமொழி


No man can flay a stone

கல்லிலே நார் உரிக்க முடியுமா?

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important Used Words


 Urine   சிறுநீர்

 Cataract பூ விழுதல்

 Typhoid விஷக்காய்ச்சல்

✍✍✍✍✍✍✍✍

பொது அறிவு


1. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
                           
 பாக் நீர்ச்சந்தி

2.அதிக மலை பெய்யம் இடம்?
                                   சிரபுஞ்சி

3.இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
                                     பூர்வாச்சல்

4. பீகாரின் துயரம்
 என்று அழைக்கப்படும் ஆறு?
                         
கோசி ஆறு

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

Today's grammar


Capitalization

Capitalization means using a capital letter (for example, A instead of a).
The use of capital letters helps readers read your writing without confusion.


Always capitalize the following:
The first word in a sentence.
I grew up in India.

S he left a message on my phone.

The pronoun I.

This country is where I dreamed of.

The first letter of a proper noun (specific name).

D avid wants to play soccer with us.

This letter is from C hang.
I graduated from the U niversity of N ew Y ork.
I like C oca- C ola.
She likes G odiva chocolates.
The first letter of months, days, and holidays (but not seasons).
Today is J une 8, 2011.
Susie's birthday is this T hursday.
The shops are closed on E aster.
This summer is going to be very hot.
The first letter of nationalities, religions, races of people, and languages.
We often eat I talian food.

📫📫📫📫📫📫📫📫

அறிவோம் தமிழ்


பிறமொழிச் சொற்கள்             

மாமூல்  - வழக்கம்

நாஷ்டா - காலை உணவு

ரத்து - நீக்கம்

பைசல் செய் -  தீர்த்து வை

ஜனங்கள் - மக்கள்

ஜில்லா - மாவட்டம்

கஜானா - கருவூலம்

சர்க்கார் - அரசு

அமல் - நடைமுறை

உபந்நியாசம் -  சமயச் சொற்பொழிவு

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

இன்றைய கதை


மகா கஞ்சனின் கதை

 கந்தன் என்ற ஒரு மகா கஞ்சன் ஆலங்குடி என்ற ஊரில் வசித்து வந்தான். ஒரு நாள் விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு சென்றார்.

 விமானம் மேலே கிளம்புவதையும் வானில் வட்டமிடுவதையும் கீழே இறங்குவதையும் இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

 அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த விமானி ஒருவர் நீங்கள் இருவரும் வாருங்கள் ஆளுக்கு நூறு ரூபாய் தான் வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம் என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். ஆனால் செலவுக்கு பயந்து நாங்கள் வரவில்லை என்றான்.

 அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி நீங்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல் உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது என்ன நடந்தாலும் நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டால் இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்றார்.

 கஞ்சன் தன் மனைவியுடன் விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன் சத்தம் போடாமல் இருந்தான். விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

 கஞ்சனுக்கு கை கொடுத்து நான் பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது வேறு யாராக இருந்தாலும் சத்தம் போட்டுருப்பார்கள். ஆனால் நீங்கள் சிறு சத்தம் எழுப்பவில்லை. எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி.

 நான் கூட ஒரே ஒரு சமயம் என் மனைவி விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது! கத்த நினைத்தேன். நல்லவேலை கத்தாமல் இருந்தேன். கத்தியிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் என்றான் கஞ்சன். அதை கேட்ட விமானி மயங்கி விழுந்தார்.

நீதி :

சிக்கனம் இருக்கலாம் ஆனால் கஞ்சத்தனம் இருத்தல் கூடாது.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

செய்திச் சுருக்கம்


🔮அத்திவரதரை தரிசிக்க வரிசையில் காத்திருந்த மூன்று பேர் மயங்கி விழுந்து மரணம்.

🔮தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பெயரில், சிற்றிதழ் பரிசு எனும் விருது அளிக்கப்பட உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைசசர் அறிவித்துள்ளார்.

🔮கேரளாவில் இருந்து ஐ.என்.எஸ். சாகர்துவானி கப்பல் கடல்சார் ஆய்வுக்காக இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

🔮தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. புதியதாக தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் உதயமாகியுள்ளது.

🔮டபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்.

♻♻♻♻♻♻♻♻

தொகுப்பு

T.தென்னரசு,
இ.ஆசிரியர்,
TN டிஜிட்டல் டீம், இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Post a Comment:

Post a Comment